அருமையான ருசியில் ஷாஹி பன்னீர் செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: சப்பாத்தி, ரொட்டிக்குச் சரியான சைட் டிஷ் என்றால் அது ஷாஹி பன்னீர். இதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
பன்னீர்- 200 கிராம்வெங்காயம்- 2தக்காளி- 2இஞ்சி- சிறிதளவுதயிர்- கால் கப்மிளகாய்த் தூள், தனியாத் தூள்,கரம் மசாலாத் தூள்- அரை தேக்கரண்டிமஞ்சள் தூள்- தேவையான அளவுசீரகத் தூள் - கால் தேக்கரண்டிமுந்திரி- 10கோவா- 2 தேக்கரண்டிஉப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: முதலில் பன்னீரைச் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சிவக்க வறுத்தெடுத்து தனியாக வைக்கவும். (குறிப்பு: எண்ணெய்யில் பொரிக்க வேண்டிய அவசியம் இல்லை.)

கொதிக்கும் தண்ணீரில் தக்காளி சேர்த்துத் தோலுரித்து, அரைத்து வைக்கவும். பிறகு வெங்காயத்தை எண்ணெய்யில்லாமல் வதக்கி, வெங்காயம் மற்றும் இஞ்சியை ஒன்றாக அரைக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அரைத்த வெங்காய விழுதைச் சேர்த்து வதக்கவும்.

இஞ்சியின் பச்சை வாசம் போகும் வரையில் வதக்கிய பிறகு தக்காளி விழுது சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பின்பு தயிர் சேர்த்துக் கிளறவும். இரண்டு நிமிடம் சென்ற பின்பு உப்பு மற்றும் எல்லா தூள் வகைகளையும் சேர்த்துக் கிளறவும். தேவையெனில் சிறிதளவு தண்ணீர் தெளித்து விடவும். மசாலா வாசம் அடங்கிய பின்னர் பன்னீரைச் சேர்க்கவும்.

அடுப்பின் தீயைக் குறைத்து மிதமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். பன்னீர் சேர்த்து பத்து நிமிடம் கொதித்ததும், முந்திரி மற்றும் கோவாவை அரைத்துச் சேர்க்கவும். கோவா இல்லையென்றால் பால் சேர்த்துக் கொள்ளலாம். கூடவே இரண்டு சிட்டிகை சர்க்கரையும் சேர்க்கவும்.

ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும். சுவையான ஷாஹி பனீர் ரெடி... இது நாண், சப்பாத்தி, ரொட்டிக்கு ஏற்ற சைட் டிஷ்.