சென்னை: குழந்தைகளுக்கான முட்டை மிளகு பிரட்டல் செய்து கொடுங்கள். ருசியாக இருக்கிறது என்று மேலும் கேட்டு சாப்பிடுவார்கள்.
தேவையான பொருள்கள் - முட்டை - 2 மிளகு - 1 தேக்கரண்டி உப்பு - 1/4 தேக்கரண்டி எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி செய்முறை: முட்டைகளை முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில்
வேக வைத்துக் கொள்ளவும். ஆறியவுடன் தோலுரித்து துருவியில் வைத்து துருவிக்
கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்
மிளகுத் தூள், உப்பு போட்டு ஒரு நிமிடம் கிளறவும். பிறகு முட்டை துருவலை
சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான
முட்டை மிளகு பிரட்டல் ரெடி. இது குழந்தைகளுக்கு சாதத்துக்கு சைட் டிஷ்ஷாக
கொடுக்கலாம். அல்லது சாண்ட்விச்சில் நடுவே வைத்துக் கொடுக்கலாம்.