மாலை நேர செம ஸ்நாக்ஸ் கார போளி: செய்முறை இதோ!!!

சென்னை: கார போளி செய்வது கொடுத்து உங்கள் குடும்பத்தினருக்கு மாலை வேளையை ருசி மிக்கதாக மாற்றுங்கள்.
தேவையானவை :
கடலை பருப்பு உளுத்தம் பருப்பு - தலா ஒரு கப்கோதுமை மாவு - இரண்டு கப்பச்சை மிளகாய் - 3மல்லித்தழை நறுக்கியது - அரை கப்பெருங்காயம் பொடி - ஒரு சிட்டிகைஎலுமிச்சம் பழம் - ஒன்றுஉப்பு - தேவைக்கு ஏற்ப.

செய்முறை: இரண்டு பருப்புகளையும் ஊற வைத்து நன்கு ஊறியதும் நீரை வடிக்கவும். அதனுடன் உப்பு, பச்சை மிளகாய், மல்லித்தழை, எலுமிச்சம் பழச்சாறு, பெருங்காயம் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். (பூரணம் போல).

கோதுமை மாவை நீர் விட்டு பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அவற்றில் அரைத்த பூரணத்தை வைத்து போளிகளாக தட்டி தவாவில் போட்டு எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும். வித்தியாசமான, சுவையான கார போளி தயார்.