அருமையான சுவையில் முட்டை சாதம் செய்முறை உங்களுக்காக!!!

முட்டை சாதத்தினை நாம் பொதுவாக ஹோட்டல்களிலேயே வாங்கிச் சாப்பிடுவதையே விரும்புவோம். ஆனால் இப்போது நாம் வீட்டிலேயே முட்டை சாதத்தினை செய்து கொடுத்து வீட்டில் உள்ளோரை அசத்தலாம் வாங்க.

தேவையானவை:

முட்டை - 5
சாதம் - 2 கப் (உதிரியாக வடித்தது)
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1/2 கரண்டி
நெய் - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிதளவு

செய்முறை: வெங்காயம். கொத்தமல்லி, பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வாணலியில் நெய் ஊற்றி சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி கலந்து வதக்கி கலவையில் ஊற்றவும். பின்னர் சாதத்தினைப் போட்டு கிளறி, எலுமிச்சை சாறு, கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் முட்டை சாதம் ரெடி.