உடல் நலனை உயர்த்தும் தட்டைப்பயிறு இட்லி செய்முறை

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் தட்டைப்பயிறு இட்லி செய்து கொடுங்கள். உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.

தேவையானவை:

ஊறவைத்த தட்டைப்பயிறு - ஒன்றரை கப்
கேரட் துருவல் - அரை கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி துருவல் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி - கைப்பிடி அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை: எட்டு மணி நேரம் ஊற வைத்த தட்டைப்பயிரை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இஞ்சி சேர்த்து பச்சை வாடை போக வதக்க வேண்டும்.

பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கவும். அதன்பிறகு துருவிய கேரட்டை வதக்கவும்.
அத்துடன் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இக்கலவை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்த மாவுடன் சேர்த்து நன்கு கலக்கி இட்லி தட்டில் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும். சுவையான தட்டை பயிறு இட்லி இதோ தயார்.