கேரளா சுவையில் மீன் ஃப்ரை செய்து குடும்பத்தினரை அசத்துங்கள்

சுவையான கேரளத்து சுவையில் மீன் ஃப்ரை செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.

மீனில் குழம்பு, ப்ரை, டிக்கா, பிரியாணி, புலாவ் என வித்தியாசமான ரெசிப்பிகளைப் பார்த்திருப்போம். அந்தவகையில் இப்போது கேரளத்து ஸ்டைலில் சுவையான மீன் ஃப்ரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை

மீன் – 250 கிராம்
வெங்காயம் - 12
இஞ்சி - 1 துண்டு
பூண்டு – 1
கரம் மசாலாத் தூள்- ½ ஸ்பூன்
தனியாத் தூள்- ½ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் - 1
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை: மீனை கழுவி சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். அடுத்து இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.

அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து இதனுடன் மீன் சேர்த்து 3 மணி நேரம் பிரிட்ஜில் சேர்த்து ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி மீன் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுத்தால் கேரளத்து மீன் ஃப்ரை ரெடி.