அருமையான ருசியில் பூண்டு தொக்கு செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: அருமையான ருசியில் பூண்டு தொக்கு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

தேவையான பொருட்கள்:
பூண்டு - 20 லிருந்து 25மிளகாய் பொடி-2 டீஸ்பூன்கொத்தமல்லி பொடி-1 டீஸ்பூன்கடுகு -1 டீஸ்பூன்வெந்தையம்-1 டீஸ்பூன்பெருங்காய பொடி- 3 டீஸ்பூன்கறிவேப்பிலை- தேவைக்கேற்பபுளி-சிறிய எலுமிச்சை அளவுஉப்பு-தேவைக்கேற்பநல்லெண்ணெய்-2 தேக்கரண்டியளவு

செய்முறை: முதலில் பூண்டை தோலுரித்து எடுத்து கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து எடுத்துக்கொள்ளவும். கடுகையும், வெந்தையத்தையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடி செய்தது கொள்ளவும்.

பின்னர் எண்ணெயை காயவைத்து அதில் கடுகையும், வெந்தயத்தையும் சேர்த்து மற்றும் பெருங்காய பொடி, பூண்டையும் சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கிய பிறகு அதில் மிளகாய்த்தூள்,கொத்தமல்லி பொடி ஆகியவற்றை சேர்த்து பிரட்டி நன்றாக வதக்கி பச்சைவாசனை போனவுடன் இறக்கவும். அருமையான ருசியில் பூண்டு தொக்கு ரெடி.