ஆரோக்கியத்தை உயர்த்தும் வாழைத்தண்டு பச்சைப்பயறு சாலட்

நோய்களை கட்டுப்படுத்தும் வாழைத்தண்டு பச்சைப்பயறு சாலட் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்ளுங்கள்.

சரியான உணவுப் பழக்கத்துடன் சரியான உணவுகளையும் எடுத்துக்கொண்டால் எந்த நோயையும் கட்டுப்படுத்தலாம் என்பது நிச்சயம். இன்றைய ஊரடங்கு நிலையில் நீரிழிவாளர்களின் உணவுப் பழக்கங்களும் சற்று மாறுபடுவதால் சிரமத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. வாழைத்தண்டு பச்சைப்பயறு சாலட் செய்து நோயைக் கட்டுப்படுத்தலாம்.

செய்முறை: 50 கிராம் வாழைத்தண்டைப் பொடியாக நறுக்கி மோரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த வாழைத்தண்டு, 20 கிராம் முளைகட்டிய பச்சைப்பயறு, சிறிதளவு கொத்தமல்லி, ஒரு டீஸ்பூன் சீரகத்தூள், இரண்டு டீஸ்பூன் மிளகுத்தூள், இரண்டு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு, 20 கிராம் தேங்காய்த்துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலந்து பரிமாறவும்.

பயன்கள்: வாழைத்தண்டு நீரிழிவைக் கட்டுப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கி நீர்ச்சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர உதவும். மேலும், தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும். பயறு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும்.