ஆரோக்கியம் நிறைந்த பச்சைப்பயிறு பக்கோடா செய்முறை

பச்சைப்பயிறை முளைக் கட்டி சாப்பிடுவது முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் இது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்கும் சக்தி கொண்டதாகவும் உள்ளது. இப்போது சத்துமிக்க பச்சைப்பயிறு பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

பச்சைப்பயிறு- 1 கப்
கொத்தமல்லி இலை- தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட்- தேவையான அளவு
தேவையான அளவு இஞ்சி பேஸ்ட்
பச்சை மிளகாய்- 3
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பச்சை பயிறினை ஊற வைக்கவும். அடுத்து பச்சை பயிறு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, அரை டீஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பக்கோடா போல் எண்ணையில் பொரிக்கவும். அருமையான ருசியில் ஆரோக்கியம் மிகுந்து பச்சைப்பயிர் பக்கோடா ரெடி.