ஆரோக்கியத்தை அளிக்கும் ஜவ்வரிசி கஞ்சி செய்முறை

சென்னை: நீர்ச்சத்து நிறைந்த உணவு ஆகாரங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது உடல் உஷ்ணத்தை போக்கி ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.

அந்த வகையில் இலங்கை ஸ்டைலில் ஜவ்வரிசி கஞ்சியை தயார் செய்வது சாப்பிட்டு பாருங்கள்.

தேவையான பொருட்கள்


ஜவ்வரிசி – கால் கப்
நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
காய்ச்சிய பால் – அரை கப்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
வெந்நீர் – சிறிதளவு

செய்முறை: வாணலியில் ஜவ்வரிசியை கொட்டி பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும். பிறகு மிக்சியில் தூளாக்கிக் கொள்ளவும். அதனுடன் வெந்நீர் சேர்த்து நன்றாக கரைத்துக்கொள்ளவும்.

காய்ச்சிய பால், நாட்டு சர்க்கரை, ஏலக்காய்தூள் ஆகியவற்றை அதனுடன் சேர்த்து கிளறவும். சுவையான ஜவ்வரிசி கஞ்சிரெடி. மிகவும் ஆரோக்கியம் நிறைந்தது இந்த கஞ்சி.