உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் தக்காளி அவல் செய்முறை உங்களுக்காக!!!

சென்னை; தக்காளி அவல் செய்து பார்ப்போமா. இப்படி செய்து கொடுத்தால் அவல் பிடிக்காதவர்கள்கூட ஒரு பிடி பிடித்து விடுவார்கள்.. குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உடனே செஞ்சு கொடுத்து அசத்துவோம் வாங்க.

தேவையான பொருட்கள்:
அவல் – 1 கப்தக்காளி – 1பச்சைப் பட்டாணி – 1/2 கப் (வேகவைத்தது)கேரட் – 1 சிறியதுபெரிய வெங்காயம் – 1கறிவேப்பிலை – சிறிதளவுகொத்தமல்லி – சிறிதளவுமிளகாய் வத்தல் – 3பெருங்காயம் – 1 சிட்டிகைமஞ்சள் – 1/2 டீ ஸ்பூன்உப்பு – தேவையான அளவுஎண்ணெய் – 4 ஸ்பூன்கடலைப்பருப்பு – 1 டீ ஸ்பூன்உளுத்தப்பருப்பு – 1 டீ ஸ்பூன்கடுகு – 1 டீ ஸ்பூன்எலுமிச்சைச் சாறு – 1 மூடி

செய்முறை: அவலுடன் மஞ்சள், எலுமிச்சைச் சாறு, உப்பு, சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் ஊறவைக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளி, கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு, கடலை, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்க்கவும். பிறகு பட்டாணி, நறுக்கி வைத்த அனைத்தையும் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.

அதனுடன் பருப்பு, ஊற வைத்த அவலை சேர்த்து நன்கு கிளறவும். பெருங்காயம் சேர்த்து இறக்கவும். சுவையான தக்காளி அவல் தயார்.