அசர வைக்கும் சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த குதிரைவாலி அரிசி பணியாரம்

குதிரைவாலி அரிசியானது நார்ச்சத்தினை அதிகம் கொண்டுள்ளழ. இதனால் உடல் எடையினைக் குறைக்க உதவுகிறது, மேலும் இது மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது. இந்த குதிரை வாலி அரிசியில் பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

குதிரைவாலி அரிசி - 1/2 கப்
தினை - 1/2 கப்
உளுந்தம்பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 4
கேரட் - 1
உப்பு- தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு- தேவையான அளவு,
உளுந்தம் பருப்பு- தேவையான அளவு,
சீரகம்- தேவையான அளவு,
சுக்கு- தேவையான அளவு,
பெருங்காயம்- தேவையான அளவு,
கறிவேப்பிலை- தேவையான அளவு,
கொத்துமல்லி-தேவையான அளவு

செய்முறை: குதிரைவாலி அரிசி, திணை, உளுந்தம் பருப்பு போன்றவற்றினை 4 மணி நேரம் ஊறவைக்கவும். இதனை இட்லி மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும். பின்னர் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவிக் கொள்ளவும்.

அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், சுக்கு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். தொடர்ந்து வெங்காயம், கேரட்டை போட்டு வதக்கவும். இந்தக் கலவையினை, மாவில் கலந்து பணியாரச் சட்டியில் எண்ணெய் ஊற்றி மாவை ஊற்றி வேகவிட்டு எடுத்தால் குதிரைவாலி அரிசி பணியாரம் ரெடி.