உங்கள் செல்ல குழந்தைகளுக்கு காரமல் பனானா ஐஸ்கீரிம் செய்து கொடுங்கள்!

குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம். இன்றைக்கு காரமல் பனானா ஐஸ்கீரிம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

என்னென்ன தேவை?
துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழம் – 1,
சர்க்கரை – 3 தேக்கரண்டி,
வெண்ணெய் – 2 தேக்கரண்டி,
ஐஸ்கீரிம் – விருப்பமான வகை,
ஜெல்லி – 6 துண்டுகள்.

எப்படி செய்வது?
கடாயில் வெண்ணெய் விட்டு வாழைப்பழத்தை பொன்னிறமாக வறுக்கவும். காரமல் செய்ய சர்க்கரையை வெண்ணெயில் லேசாக வறுத்து வாழைப்பழத்தின் மேல் ஊற்றவும். பின் பரிமாறும் போது 2 காரமல் வாழைப்பழம், அதன் மேல் 2 ஜெல்லி, அதன் மேல் ஐஸ்கீரிம், அதன் மேல் 2 காரமல் வாழைப்பழம், அதன் மேல் 4 ஜெல்லி வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.