அசத்தலான காரமல் கஸ்டெர்ட் செய்யலாம் வாங்க!

புதுசா ஏதாவது சமைக்கணும் நினைக்குறீங்களா? அப்போ இது உங்களுக்குத்தான். உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு காரமல் கஸ்டெர்ட் செய்து கொடுத்து அசத்துங்க.
தே​வையான ​​பொருட்கள்
பால் –250 மில்லி
முட்டை — 3
காரமல் சர்க்கரை –4 டேபிள் ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் –4 சொட்டு
சர்க்கரை –1/4 கப்

செய்முறை
காரமல் சர்க்கரை செய்வதற்கு: ஒரு பேனில் 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரை போட்டு ஒரு ஸ்பூன் தண்ணீர் விட்டு கிளறவேண்டும். நன்றாக கிளறி சர்க்கரை உருகி பிரவுன் ஆனவுடன் ஒரு பவுலில் ஊற்றவும்.

காய்ச்சிய பாலில் சர்க்கரையை கலக்கவும். முட்டையுடன் வெண்ணிலா எசன்ஸ்சையும் சேர்த்து நன்றாக அடிக்கவேண்டும். இவை இரண்டையும் ஒன்றாக கலந்து காரமல் சர்க்கரை கலந்த பவுலில் ஊற்றவேண்டும்.

இதனை ஒவனில் 15 நிமிடம் வைக்கவும். அல்லது குக்கரில் தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதற்குள் காரமல் கஸ்டெர்ட் அடங்கிய பவுலை வைத்து 40 நிமிடம் வேக விட்டு இறக்கவும். சுவையான காரமல் கஸ்டெர்ட் ரெடி!