அசத்தலான சுவையில் சாக்லெட் புடிங் செய்து பாருங்க!

புடிங் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவு பொருளாகும். புடிங்கில் பலவகை உள்ளன. பழங்கள் வைத்தும் விதவிதமாக புடிங் செய்யலாம். இன்றைக்கு சாக்லெட் வைத்து புடிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கார்ன் ப்ளோர்(மக்காச்சோள மாவு) – 4 1/2 தேக்கரண்டி
சாக்லெட் – 30 கிராம்
பால் – 3/4 லிட்டர்
சீனி – 30 கிராம்
நறுக்கிய முந்திரிப் பருப்பு – 2 மேஜைக்கரண்டி

செய்முறை
ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதன் உள் வேறு பாத்திரத்தில் சாக்லெட்டை வைத்தால், உருகி விடும். இதை தயாராக வைத்துக் கொள்ளவும். சிறிதளவு பாலில் கார்ன் ப்ளோரை நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். மீதிப் பாலில் உருக்கிய சாக்லெட்டையும் கலந்து கொதிக்க வைத்து, கரைத்த கார்ன் ப்ளோரை அதில் ஊற்றி கட்டி விடாமல் கிளற வேண்டும்.

சீனியையும் அத்துடன் பாலையும் சேர்த்து, கெட்டியாகும் வரை விடாமல் கிளற வேண்டும். இதை இறக்கி நன்றாகக் குளிர வைத்து மேற்பாகத்தில் முந்திரிப்பருப்பைத் தூவி உபயோகிக்கலாம்.