டெல்லி பிரபலமான குல்லே கி சாட் செய்வது எப்படி?

டெல்லியில் மிகவும் பிரபலமான பழைய சுவையான உணவுகளில் ஒன்று குல்லே கி சாட். இந்த பதிவில் குல்லே கி சாட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
உருளைக்கிழங்கு – 2
கொண்டைக்கடலை – 1 // 4 கப்
கல் உப்பு – தேவைக்கேற்ப
பிளாக் சாட் மசாலா
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 1(சிறிய துண்டுகளாக வெட்டவும்)
மாதுளை – சிறிதளவு
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி

செய்முறை
முதலாவது உருளைக்கிழங்கை வேகவைத்து, அவற்றை தோல் உரித்து கொள்ளுங்கள். அதன்பின் கடலையை வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் சுண்டல், பச்சை மிளகாய், மாதுளை, இஞ்சி, உப்பு, பிளாக் சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை மிக்ஸ் செய்து உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி அதின் மேல் வைத்து சாப்பிடுங்கள். இது மிகவும் சுவையானது மட்டுமல்லாமல் மிகவும் ஆரோக்கியமானது.