அசத்தலான இளநீர் வழுக்கை ஐஸ்கிரீம் நீங்களே செய்யலாம்!

குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம். இன்றைக்கு புது விதமாக இளநீர் வழுக்கை ஐஸ்கிரீம் செய்து பாருங்கள்.

என்னென்ன தேவை?
கிரீம் – 1 கப்
இளநீர் வழுக்கை – 2 கப்
கன்டன்ஸ்டு மில்க் – 1/2 கப் – 3/4 கப்
சர்க்கரை – 1/2 கப்
இளநீர் – 1 கப்

எப்படிச் செய்வது?
ஒரு ஜாரில் தேங்காயை எடுத்து அத்துடன் சர்க்கரை, கன்டன்ஸ்டு மில்க், தண்ணீர் சேர்த்து நன்றாக மசிக்கவும். ஒரு கிண்ணத்தில் அதை ஊற்றி அதில் சிறிது துண்டாக்கப்பட்ட இளநீர் வழுக்கையை சேர்க்கவும். இப்போது அதே ஜாரில் கிரீம்யை எடுத்து மசித்து தேங்காய் கலவையின் மீது ஊற்றி நன்றாக கலக்கி, ஒரு பாதுகாப்பான கிண்ணத்தில் ஊற்றி 6 முதல் 8 மணி நேரம் ஃபிரீசரில் வைக்கவும். பின் பரிமாறவும். அசத்தலான இளநீர் வழுக்கை ஐஸ்கிரீம் தயார்.