பட்டாணி ஸ்டஃப்டு பூரி செய்வது எப்படி ?

குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். பட்டாணியை வைத்து சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை செய்வது மிகவும் சுலபம்.

தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 1 கப்
ரவை - 2 டேபிள்ஸ்பூன்
தயிர் - சிறிதளவு
பச்சை பட்டாணி - 1 கப்
மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சர்க்கரை - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

பட்டாணியை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவையுடன் சிறிதளவு எண்ணெய், உப்பு சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசைய வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த பட்டாணி கலவையை கொட்டி பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும்..

அதனுடன் மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வதக்கி இறக்க வேண்டும். மாவு கலவையை பூரிகளாக தேய்த்து அதனுள் பச்சை பட்டாணி பூரண கலவையை வைத்து மூடி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க சுவையான பட்டாணி பூரி தயார்.