சப்போட்டா பழச்சாறு தயாரிப்பது எப்படி?

சப்போட்டா பழத்தில் அதிக சத்துக்கள் இருக்கிறது. இன்று நாம் சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த சப்போட்டா பழச்சாறு தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சப்போட்டா 3
பால் 1 கப்
சர்க்கரை 3 (மேசைக்கரண்டி)

செய்முறை
1. பழுத்த சப்போட்டாவை தண்ணீரில் நன்கு அலசி, தோல் சீவி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் தண்ணீர் 1/2 கப் சேர்த்து அரைக்கவும்.

2. நைசாக அரைத்ததும், சர்க்கரை மற்றும் பால் சேர்த்து மீண்டும் ஜுஸ் ஜாரில் போட்டு நன்கு அடிக்கவும். தேவைப்பட்டால் குளிர்ந்த தண்ணீர் கலக்கவும்.

3. சுவையான, ஆரோக்கியமான சப்போட்டா பழச்சாறு தயார்.

சத்துக்கள்
எந்த பழமும் நாம் வெறுக்கக்கூடிய பழம் அல்ல. . சப்போட்டா பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும். சப்போட்டா கூழுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து பருகினால் சளி குணமாகும்.