இருமல், ஜலதோஷம், சளி இருப்பவர்களுக்கு நல்ல நிவாரணத்தை கொடுக்கும் சுக்கு காப்பியை எப்படி வீட்டிலேயே எளிதில் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் சுக்கு சிறு துண்டு நல்ல மிளகு 1 டேபிள் ஸ்பூன் திப்பிலி 1/4 டேபிள் ஸ்பூன் இலவங்கப்பட்டை சிறிது ஏலக்காய் 2 கருப்பட்டி தேவைக்கு தண்ணீர் 5 கப் செய்முறை முதலில் நல்லமிளகு, சுக்கு, திப்பிலி ஏலக்காய் இதையெல்லாம் நன்றாக இடித்து வைத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் அதில் எல்லா பொருட்களையும் சேர்த்து விடுங்கள். எல்லா பொருள்களையும் சேர்த்த பிறகு ஒரு 5 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். 5 நிமிடத்தில் ஆவி பறக்கும் சுக்கு காப்பி தயார். மிகவும் எளிதாக இந்த ஆரோக்கிய பானத்தை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து குடித்து வரலாம். உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.