இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையான சுவையில் பெப்பர் மஷ்ரூம் கிரேவி செய்முறை

இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளும் வகையிலான பல வகையான சட்னி, சாம்பார்களை சாப்பிட்டு இருக்கிறோம். தற்போது டேஸ்ட்டியான சுவை மிகுந்த பெப்பர் மஷ்ரூம் கிரேவி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை:

பட்டன் மஷ்ரூம்- 2 பாக்கெட்
பெரிய வெங்காயம்- 2
தக்காளி- 1
இஞ்சி- 1 துண்டு
பூண்டு- 3 பல்
மிளகாய் தூள்- தேவையான அளவு
தனியாதூள்- 1 மேசைக்கரண்டி
மிளகு- 1 மேசைக்கரண்டி
சோம்பு- 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்- 1 மேசைக்கரண்டி
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை- சிறிதளவு

செய்முறை: வெங்காயம், தக்காளி, மற்றும் இஞ்சி பூண்டு அனைத்தையும் வதக்கி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் சோம்பு, மிளகு சேர்த்து வறுத்து மிக்ஸியில் தூள் செய்து கொள்ளவும்.

கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு, நறுக்கிய வெங்காயம், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, நறுக்கி வைத்துள்ள தக்காளி, மஷ்ரூம், லேசான தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

மஷ்ரூம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள சோம்பு மற்றும் மிளகு தூளை சேர்த்து நன்கு பிரட்டி சிறிதளவு கறிவேப்பிலையை தூவி இறக்கினால் மஷ்ரூம் கிரேவி ரெடி. இந்த கிரேவி வாசனை உங்கள் வீட்டையே மணக்க செய்து விடும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.