இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை ரசம் செய்முறை

முருங்கை கீரையினைக் கொண்டு ரசம் செய்து சாப்பிடுங்கள். ஆரோக்கியம் அதிகரிக்கும். முருங்கைக்கீரை சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். அதோடு உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகரிக்கும். முட்டையும் நம் உடலுக்கு தேவையான புரதசத்துகளையும் வைட்டமின் டி -யையும் தருகிறது. முருங்கை கீரை ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

முருங்கைக்கீரை - 1/2 கப்
தக்காளி - 1
எலுமிச்சை - 1
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு ஸ்பூன்
பூண்டு - 3 பற்கள்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்தளவு
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு,
கடுகு - சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு

செய்முறை: தக்காளியை நறுக்கி கொள்ளவும். முருங்கைக்கீரையை சுத்தம் செய்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும். பூண்டு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை போன்ற அனைத்தையினையும் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போன்ற பொருட்களைத் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். பின்பு அத்துடன் தூள் வகைகளையும், தக்காளியைச் சேர்த்து வதக்கவேண்டும்.

தக்காளி குழைய வதங்கியதும் முருங்கைக்கீரையை வேக வைத்த நீருடன் சேர்த்து, தேவையான அளவு சுடு நீர் ஊற்றி எலுமிச்சை சாறு பிழிந்துவிடவேண்டும். இதில் உப்பு சேர்த்து ஒரு கொதிக்க விடவும்.
சத்தான முருங்கைக்கீரை ரசம் ரெடி.