உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொள்ளு கட்லெட் செய்முறை

சென்னை: உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் கொள்ளு முக்கிய இடம் வகிக்கிறது. இதில் கட்லெட் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
கொள்ளுப்பயிறு ஒரு கப்,முட்டைக்கோஸ்,வெங்காயம்,கேரட்,குடைமிளகாய் நறுக்கியது அரைக்கப்,கரம் மசாலா அரை டீஸ்பூன்,நறுக்கிய பச்சை மிளகாய் 2,மஞ்சள் தூள் சிறிதளவு,உப்பு தேவையான அளவு,சோம்புப்பொடி ஒருடீஸ்பூன்.பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்.

செய்முறை: கொள்ளுப்பயிறை ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு கொரகொரவென அரைத்து வைக்கவும். அந்தக் கலவையுடன் நறுக்கிய காய்கறிகள் சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி, கரம் மசாலா, உப்பு, சோம்புப்பொடி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணையை காயவைத்து விரும்பிய வடிவில் தட்டி எண்ணையில் போட்டு பொரித்தெடுத்தால் கொள்ளு கட்லெட் ரெடி. அருமையான சுவை மட்டுமின்றி காய்கறிகளின் சத்தும், கொள்ளு பயிறின் சத்தும் உடலுக்கு கிடைக்கும்.