கல்யாண முருங்கை இலை அடை செய்முறை

சென்னை: கல்யாண முருங்கை இலை அடை எப்படி செய்வது என்று தெரியுங்களா? தெரிந்து கொள்வோம் வாங்க.

தேவையானவை:
புழுங்கல் அரிசி ஒரு கப்கல்யாண முருங்கை இலை ஒரு கப்மிளகு சீரகம் தலா ஒரு ஸ்பூன்உப்பு ஒரு சிட்டிகைஎண்ணெய் தேவைக்கேற்ப.

செய்முறை: கல்யாண முருங்கை இலையை நரம்பு எடுத்து சுத்தம் செய்யவும். ‌ அரிசியை ஊறவைத்து அரைக்கவும் கடைசியாக மிளகு, சீரகம், உப்பு, முருங்கை இலைகளை சேர்த்து அரைக்கவும். உடம்புக்கு மிகவும் நல்லது. சளித்தொல்லைகளை தீர்க்க வல்லது இது.

உயர் இரத்த அழுத்தம். கொண்டிருப்பவர்கள் முருங்கை இலையை அரைத்து விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவு உருட்டி உருண்டையாக எடுத்துகொள்ளவும். இது ஆரம்பகால உயர் இரத்த அழுத்தத்தை தடுக்க உதவுகிறது.

ஈறு நோய்கள் வராமல் தடுக்க முருங்கை இலைகள் , அதனுடன் 2-3 பல் பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் மிளகு சேர்த்து அரைக்கவும். இதை சுண்டக்காய் அளவு எடுத்துகொள்ளலாம். முருங்கை இலையை உலர வைத்து பொடி செய்தும் இதனுடன் சேர்த்து எடுத்துகொள்ளலாம்.

முருங்கை இலைகள் வாய் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். முருங்கைக்கீரையில் கால்சியம் இருப்பதால் இது பற்களை பலப்படுத்துகிறது. முருங்கை மர பட்டை சீரகம் மற்றும் அரிசி நீர் கலந்து வாய் கொப்புளித்தால் ஈறு அல்லது பிற நோய்களை தடுக்க சிறந்ததாக இருக்கும்.