குழந்தைகளுக்கு பிடித்த ஆரோக்கியம் நிறைந்த அவகேடா சாக்கோ செய்முறை

சென்னை: அருமையான சுவையில் சூப்பரான அவகேடோ சாக்கோ வீட்டிலேயே எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் : நன்கு கனிந்த பட்டர் ஃப்ரூட் (அவகேடோ) - 2 கெட்டியான பாதாம் மில்க் - அரை கப் கோகோ பவுடர் - அரை கப் துருவிய டார்க் சாக்லேட் - கால் கப் நாட்டுச் சர்க்கரை - அரை கப் அலங்கரிக்க: சாக்கோ சிப்ஸ், பழத்துண்டுகள், வீட்டிலேயே செய்த கோதுமை வேஃபல், ஐஸ்க்ரீம் – தேவைக்கேற்ப

செய்முறை: அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பிளெண்டரில் போட்டு நான்கு நிமிடங்களுக்கு அடிக்கவும்.

பின்னர் பிரிட்ஜில் குளிரவைத்து, அழகான டம்ளர்களில் ஊற்றி, அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களில் உங்களுக்கு விருப்பமானவற்றைத் தூவிப் பரிமாறவும். இப்போது சூப்பரான அவகேடோ சாக்கோ ரெடி.