அருமையான சுவையில் ஆரோக்கியம் நிறைந் எள்ளு வேர்க்கடலை சட்னி செய்வோம் வாங்க!!!

சென்னை: எளிமையானதும், உடலுக்கு ஊட்டம் அளிக்கும் எள்ளு வேர்க்கடலை சட்னி செய்து குடும்பத்தினரை மகிழ்ச்சி அடைய செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்: எள்ளு – இரண்டு டீஸ்பூன் (லேசாக வறுத்தது), வறுத்த வேர்க்கடலை – அரை கப், வறுத்த காய்ந்த மிளகாய் – மூன்று, தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன், புளி – ஒரு சிறு துண்டு, உப்பு – தேவைக்கேற்ப , எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை: முதலில் எள்ளு, வேர்க்கடலை, வறுத்த காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் கொட்டி வருக்க வேண்டும். பிறகு பரிமாறவும். தேங்காய், தக்காளி சட்னி என்பதற்கு மாற்றாகவும் உடல் ஆரோக்கியத்தையும் அளிக்கும் இந்த சட்னி.