குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அளவிற்கு வெண்டைக்காய் ரோஸ்ட் செய்வோம் வாங்க

சென்னை: குழந்தைகளுக்கு வெண்டைக்காய் என்றால் சற்றே வெறுப்புதான். இருந்தாலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிட சாப்பிடும் அளவிற்கு வெண்டைக்காயை ருசியாக இப்படி செய்து கொடுத்தா கண்டிப்பா சாப்பிடுவாங்க.

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய்- 250 கிராம்உப்பு- 1 1/2 தேக்கரண்டிமிளகாய்த் தூள்- 1 தேக்கரண்டிமஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டிகரம் மசாலா- 1/2 தேக்கரண்டிசீரகப் பொடி- 1/2 தேக்கரண்டிசாட் மசாலா- 1 தேக்கரண்டிகடலை மாவு- 3 மேசைக்கரண்டிசோள மாவு- 1 மேசைக்கரண்டிஎண்ணெய்- பொரிப்பதற்குத் தேவையான அளவுஎலுமிச்சை- 1

செய்முறை: முதலில் வெண்டைக்காயை நன்கு நீரில் அலசி, துணியால் துடைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை நீளமாக நான்கு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பௌலில் வெண்டைக்காய், உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி மற்றும் சாட் மசாலா சேர்த்துக் கலந்து 10-12 நிமிடம் ஊற வைக்க வேண்டும். (குறிப்பு: டிரை-யாகவே இந்த கலவையைக் கலக்க வேண்டும். நீர் சேர்க்க வேண்டாம். இப்படி ஊற வைப்பதால், வெண்டைக்காயானது சிறிது நீரை வெளியேற்றும்.)

இப்போது அதில் கடலை மாவு மற்றும் சோள மாவு சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கலந்து வைத்துள்ள வெண்டைக்காயைப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும்.

பின் பொரித்த வைத்துள்ள வெண்டைக்காயின் மீது எலுமிச்சை சாற்றினை தெளித்தால், குர்குரே ஸ்டெய்ல் வெண்டைக்காய் ரெடி!!! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.