சத்தான ரவா இட்லி செய்து குடும்பத்தினர் ஆரோக்கியத்தை உயர்த்துங்கள்

சத்தான ரவா இட்லி செய்து கொடுத்து உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆரோக்கியத்தை உயர்த்துங்கள்.

நாம் தினமும் ஆரோக்கியமான உணவை உண்ணுகிறோமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறிதான். அனைவரும் கையில் இருக்கும் சத்தான உணவை விட்டு உடலின் சத்தை குறைக்கின்ற உணவை தான் தேடி அலைந்து வாய்க்கு ருசியாக உண்கிறோம். ஆனால் இதனின் பக்க விளைவுகளை நாம் இப்பொழுது உணரமாட்டோம். சரி வாங்க சத்தான ரவா இட்லி செய்வது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:

இட்லி மாவு - 200 கிராம்
ரவை -100 கிராம்
தயிர் - 200 கிராம்

செய்முறை: முதலில் ஒரு கிண்ணத்தில் இட்லி மாவை எடுத்து கொள்ளவும். முதலில் தேவையான ரவையை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்

பின்பு அதில் தயிர் மற்றும் லேசாக வெந்நீரை தெளித்து கலக்கி கொள்ளவும். இந்த கலவையை ஒரு 30 நிமிடம் ஊற வைக்கவும்.
கலந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி 15 நிமிடம் வேகவிட்டால் சத்தான ரவை இட்லி தயார். இந்த இட்லிக்கு கெட்டியான தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்..