அவலில் பாயாசம் செய்து கொடுத்து குழந்தைகளை அசத்துங்கள்

அவல் உடல் எடையினைக் குறைக்கும் தன்மை கொண்டது, இத்தகைய அவலில் சுவையான பாயாசம் செய்து கொடுத்து குழந்தைகளை குஷிப்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்
அவல் – 100 கிராம்
நெய்- 20 கிராம்
ஏலக்காய்த் தூள் – 1 ஸ்பூன்
முந்திரி - 5
பால் – 250 மில்லி
சர்க்கரை – 100 கிராம்

செய்முறை: அவலுடன் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிடவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி காய்ச்சவும். பால் பொங்கும்போது அவல், சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்க்கவும்.

பின்னர் வாணலியில் நெய் ஊற்றி முந்திரியினை வறுத்து பாயாசத்தில் கலந்தால் அவல் பாயாசம் ரெடி.