நவராத்திரி ஸ்பெஷல் வேர்கடலை சுண்டல் செய்முறை

சென்னை: நவராத்திரியின் போது தினமும ஒரு வகை சுண்டல் செய்வது வழக்கம். அந்த வகையில் வேர்க்கடலை சுண்டல் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்வேர்க்கடலை – ஒரு கப் (அரை உப்பு போட்டு வேகவைத்தது) மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவைகேற்ப, தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்,

பொடி செய்ய:
கருப்பு எள்ளு – ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – இரண்டு, அனைத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

தாளிக்க:
எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – இரண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு,

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பிறகு, அதில் வேகவைத்த வேர்க்கடலை, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து மூன்று நிமிடம் கிளறவும். பின், பொடி சேர்த்து கிளறி இரண்டு கழித்து இறக்கவும். அருமையான நவராத்திரி ஸ்பெஷல் வேர்கடலை சுண்டல் ரெடி.