உடலுக்கு ஊட்டம் தரும் முருங்கை காம்பு சூப் செய்முறை

சென்னை: முருங்கை காம்பு சூப் செய்து சாப்பிட்டு பாருங்கள். இரும்பு சத்து நிறைந்த இது உடலுக்கு ஊட்டம் தரும்.
முருங்கை மரம் நமக்கு இயற்கையின் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். முருங்கை மரத்தில் இலை, பூ, காம்பு, காய் என அனைத்துமே அதிகமான பயன் தரக்கூடியது. 1 மாத குழந்தை முதல் வயதானவர்கள் வரை இயற்கை வைத்திய மூலிகையாக பயன்படுத்தலாம்.உதாரணமாக இதில் இரும்பு சத்து, பாஸ்பரஸ், புரதம், கால்சியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி போன்ற உடலுக்கு முக்கியத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது. இதன் காம்பை சமையலில் எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
முருங்கை காம்பு 2 கோப்பை சுத்தம் செய்து, சிறியதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.பாசி பருப்பு - 1 மேஜைக்கரண்டிசின்ன வெங்காயம்-5பூண்டு 3 பல்பச்சை மிளகாய் 1தக்காளி பாதி அளவு அல்லது சிறியதுஉப்பு-1 தேக்கரண்டிமஞ்சள் தூள்சீரகம்-1/4 தேக்கரண்டி

செய்முறை: மேல் கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக, குக்கரில் 3 அல்லது 4 விசில் வேகவைத்துக் கொள்ளவும். ஆறியதும் நன்கு கடைந்து ஒரு வடிகட்டி வைத்து வடித்துக்கொள்ளவும்.

வாணலியில் 1 தேக்கரண்டி நெய், சீரகம் சிறிது கறிவேப்பிலை ஒரு சிட்டிகை கரம் மசாலா தூள் சேர்த்து தாளிதம் செய்யவும். சத்தான, சுவையான முருங்கை காம்பு சூப் தயார். உடலுக்கு வலிமையையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும்.