இட்லி, தோசைக்கு ஏற்ற சத்தான உளுந்து சட்னி செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: இதயம் சீராக செயல்பட உளுந்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutrients) உதவுகின்றன. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள் :உளுந்து – அரை கப்தேங்காய் துருவல் – சிறிதளவுகாய்ந்த மிளகாய் – 2புளி – சிறிதளவுஉப்பு – தேவையான அளவுகடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை

செய்முறை:அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும், அவற்றில் உளுந்து சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
பின் அதனுடன் இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு தேங்காய் துருவல், சிறிதளவு புளி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். பின் அடுப்பில் இருந்து இறக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் மைபோல் அரைக்க வேண்டும்.
பின்பு கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் கலந்து அனைவருக்கும் பரிமாறவும். இது இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள் என்பதால் வீட்டில் உள்ளவர்கள் இந்த சட்னியை கொஞ்சம் கூட மிச்சம் வைக்கமாட்டார்கள்.