சத்தான சிவப்பு அவல் கொழுக்கட்டை செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: சத்துக்கள் நிறைந்த சிவப்பு அவல் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் தன்மை கொண்டது, இதில் கொழுக்கட்டை செய்வோம் வாங்க.

தேவையானவை: சிவப்பு அவல் – 1 கப், உப்பு – 1 சிட்டிகை, தண்ணீர் – 2 கப், கருப்பு மிளகு அல்லது நாட்டு சர்க்கரை – 3/4 கப், தேங்காய் துருவல் – 3/4 கப், ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை.

செய்முறை: சிவப்பு அவலை மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும். . 2 கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். பொடித்த அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்கும் நீரை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.

இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அடுத்து, ஊறவைத்த சிவப்பு அவலை இட்லி தட்டில் பரப்பி, 7 முதல் 10 நிமிடங்கள் வரை வேக விடவும்.

வேகவைத்த அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு (அவலா சூடாக இருக்கும்போதே) அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். இப்போது சத்தான சுவையான சிவப்பு அவல் புட்டு ரெடி.