எளிய முறையில் செய்யலாம் ஆரஞ்சு ஸ்குவாஷ்!!

குழந்தைகளுக்கு குளிர்பானம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஆரஞ்சு ஸ்குவாஷ் எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
ஆரஞ்சுப் பழச்சாறு - 4 கப் (விதை நீக்கி, வடிகட்டவும்),
தண்ணீர் - 3 கப்,
சர்க்கரை - தேவையான அளவு,
கே.எம்.எஸ் பவுடர் (பொட்டாசியம் மெட்டா பை சல்பேட்) - கால் டீஸ்பூன்,
ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு துளி,
சிட்ரிக் ஆசிட் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை
சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் சிட்ரிக் ஆசிட், கே.எம்.எஸ் பவுடர் சேர்த்துக் கிளறவும். பிசுக்கு பாகு பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். இதனுடன் ஆரஞ்சுப் பழச்சாறு, ஃபுட் கலர் சேர்த்துக் கலந்து, சுத்தமான பாட்டிலில் ஊற்றிவைக்கவும். இதுவே ஆரஞ்சு ஸ்குவாஷ். தேவையானபோது ஒரு கப் குளிர்ந்த தண்ணீரில் 3 டேபிள்ஸ்பூன் ஸ்குவாஷ்விட்டுக் கலந்து பருகவும்.

குறிப்பு: ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் நன்கு குலுக்கிய பிறகு பயன்படுத்தவும். பல மாதங்கள் வரை நன்றாக இருக்கும். ஃப்ரெஷ்ஷாகப் பருக வேண்டுமானால் ஆரஞ்சு பழச்சாற்றுடன் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை மிளகுத்தூள், புதினா இலை, ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பருகலாம்.