வித்தியாசமான முறையில் சுவை மிகுந்த பனீர் மிளகு வறுவல் செய்முறை

எப்போதும் வழக்கமாக சாப்பிடும் மட்டன், சிக்கன் ரெசிப்பிகள் செய்து போர் அடித்துவிட்டதா? இன்று வித்தியாசமாக பனீர் மிளகு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:


பனீர் - 250 கிராம்,
வெங்காயம் - 3,
பச்சைமிளகாய் - 2,
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1½ டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்,
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - தேவையான அளவு,
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை: பனீரை வெட்டி, வெதுவெதுப்பான நீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மசாலா வாசனை போனதும் மிளகுத் தூள், கரம் மசாலாத் தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும். அடுத்து சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு, தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, பனீர் சேர்த்து வேகவிட்டு கறிவேப்பிலை தூவி இறக்கினால் சூப்பரான சுவையில் பனீர் மிளகு வறுவல் ரெடி.