சுவையான அப்பளம் போட்ட வத்தக்குழம்பு செய்வது எப்படி?

அனைவருக்கும் பிடித்த அப்பளத்தை பயன்படுத்தி வத்தல் குழம்பு செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
அப்பளம் – 5
புளி – சிறிதளவு
வெங்காயம் – 1
பூண்டு – 4 பற்கள்
வரமிளகாய் – 2
வெந்தயம் – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
பருப்பு பொடி -1 தேக்கரண்டி
அரிசிமாவு – 1 தேக்கரண்டி
சாம்பார் பொடி -1 தேக்கரண்டி
ரசப்பொடி – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – சிறிதளவு
வெல்லம் – கொஞ்சம்
கறிவேப்பிலை

செய்முறை
முதலாவது புளியை ஊறவைத்து விடுங்கள். அதன் பின் வெங்காயத்தை தோல் எடுத்து சிறியதாக நறுக்கி கொள்ளவும். அதன்பின் பூண்டை தோல் எடுத்து சதைத்து வைத்து கொள்ளுங்கள் . இதை முடித்த பிறகு குழம்பு செய்ய பயன்படுத்தும் பாத்திரத்தில் நல்லெண்ணெய் காயவைத்து கடுகு, வத்தல், கறிவேப்பில்லை கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு , வெந்தயம் சேர்த்து தாளித்து விடவும்.

அதன்பின் அதே எண்ணெயில் அப்பளத்தை சிறு துண்டுகளாக உடைத்து சேர்த்து விடுங்கள். அப்பளம் நன்கு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் சதைத்தது வைத்த பூண்டு சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் சாம்பார் பொடி, ரசப்பொடி, மல்லிப்பொடி மற்றும் தேவையான உப்பும் சேர்த்து வதக்கவும். அதன்பின் புளிக்கரைசலைச் சேர்த்து நன்கு மிதமான தீயில் கொதிக்கவிடுங்கள்.

நன்கு கொதித்ததும் அதில் சிறிதளவு வெல்லம் சேர்க்கவும். அதன்பின் அரிசிமாவு, பருப்பு பொடி ஆகியவற்றை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். குழம்பு நன்கு காய்ந்து எண்ணெய் மிதந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள். சுவையான அப்பளம் போட்ட வத்தக்குழம்பு தயார்.