குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட பப்பாளி பழ பாயசம்

சென்னை: அருமையான ருசியில் பப்பாளிபழ பாயசம் செய்து கொடுங்கள். உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையானவை: பப்பாளிபழம் (நறுக்கியது) – ஒரு கப், தேங்காய்ப்பால் – அரை கப், வெல்லம் (பொடித்தது) – அரை கப், முந்திரி, திராட்சை – தலா 20, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை:நறுக்கிய பப்பாளியை மிக்ஸியில் போட்டு, குறைந்த அளவு வேகத்தில் வைத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த பழக் கலவையை பாத்திரத்தில் விட்டு, அதில் தேங்காய்ப்பால், பொடித்த வெல்லம் (வெல்லத்துக்கு பதில் தேன் சேர்த்துக் கொள்ளலாம்), முந்திரி, திராட்சை, ஏலகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்தால்… பப்பாளிபழப் பாயசம் ரெடி!

ஆப்பிள், மாம்பழம், அன்னாசி, வாழைப்பழம் ஆகிய பழங்களிலும் இதே முறையில் பாயசம் செய்யலாம். மலச்சிக்கல், தொப்பை, பசியின்மை, குடல்புண், உடல் சூடு போன்ற உடல் பிரச்னைகளைக் கட்டுப்படுத்தும் குணம் இந்த பழ பாயசத்துக்கு இருக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதைத் தவிர்க்கவும்.