அருமையான சுவையில் பசலைக்கீரை கூட்டு செய்முறை

பசலைக் கீரையில் பொதுவாக குழம்பு, பொரியல் ரெசிப்பிகளையே செய்வோம், இப்போது நாம் பசலைக்கீரையில் சுவையான கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். அருமையான சுவையில் உடலுக்கு ஆரோக்கியமும் அளிக்கும்.

தேவையான பொருட்கள்:


பசலைக்கீரை - 1 கட்டு
பாசிப் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1
வர மிளகாய் - 2
கடுகு- உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு – ½ பூண்டு
பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: குக்கரில் தண்ணீர்விட்டு பாசிப் பருப்பை நன்கு வேகவிடவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், மிளகாய் பசலைக்கீரை சேர்த்து வதக்கவும். இதனுடன் பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து வேகவிடவும்.

அதேபோல் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், பூண்டு போட்டு தாளித்து கீரையுடன் கொட்டி சேர்த்து கிளறினால் பசலைக்கீரை கூட்டு ரெடி!!!