எளிய முறையில் சூப்பர் சுவையில் அவல் உப்புமா செய்முறை

அவல் உடல் எடையினைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் அவசரமாக ஏதாவது டிபன் செய்ய நினைத்தால் நிச்சயம் அவல் உப்புமா செய்யலாம். ஆரோக்கியம் நிறைந்தது.

தேவையானவை:

அவல் – 100 கிராம்
வெங்காயம் - 1
கடுகு- உளுந்து – 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
மிளகாய் - 3
மஞ்சள் தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை- தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை: அவலை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். மறுபுறம் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

அடுத்து வெங்காயம், அவல், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிட்டு இறக்கினால் அவல் உப்புமா ரெடி. சீக்கிரம் செய்து முடித்து விடலாம். அதே நேரம் எளிதில் ஜீரணமாகும். உடலுக்கும் ஆரோக்கியம் நிறைந்த உணவு.