வித்தியாசமான சுவையில் ஸ்வீட் கார்ன் பொங்கல் செய்முறை

சென்னை: ஸ்வீட் கார்ன் பொங்கல் செய்து பார்த்து இருக்கிறீர்களா. அதை செய்து பாருங்கள். இதோ உங்களுக்காக அதன் செய்முறை.

தேவையானவை:
ஸ்வீட் கார்ன் - 2 கப்பாசிப் பருப்பு - அரை கப்சர்க்கரை - 2 கப்நெய் - அரை கப்முந்திரி திராட்சை ஏலக்காய் தேவைக்கேற்பபசும்பால் - அரைகப்

செய்முறை: பாசிப்பருப்பையும், சோள முத்துக்களையும் தனித்தனியே வேக வைக்கவும். வெந்ததும் இரண்டையும் கலந்து நெய், சர்க்கரை சேர்க்கவும். கெட்டியாகும் போது பாலை ஊற்றி கிளறவும்.

நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கி வைத்தால் சுவையான ஸ்வீட் கார்ன் பொங்கல் தயார்.