அருமையான ருசி சுர்னாலி தோசை செய்து பாருங்கள்..!

சென்னை: சுர்னாலி தோசை செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? செய்து பாருங்கள். இதோ அதன் செய்முறை.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்வெந்தயம் - 1/4 தேக்கரண்டிஅவல் - 3/4 கப்துருவிய தேங்காய் - 1/2 கப்புளித்த தயிர் - 1/4 கப்உப்புதண்ணீர்

செய்முறை: பாத்திரத்தில் பச்சரிசி, வெந்தயம் சேர்த்து தண்ணீரில் கழுவி 4 மணிநேரம் ஊறவிடவும். பின்பு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி, வெந்தயம் மற்றும் அவலை தண்ணீரில் கழுவி சேர்க்கவும்.

பிறகு துருவிய தேங்காய், புளித்த தயிர், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பிறகு பாத்திரத்திற்கு மாற்றி உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து 8 மணிநேரம் புளிக்க வைக்கவும்.

பின்பு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மாவை கலந்துவிடவும். தோசை கல்லை சூடு செய்து, அதில் எண்ணெய் தடவி பின்பு மாவை ஊற்றி மெதுவாக மாவை எல்ல பக்கமும் பரப்பி விடவும். பிறகு தோசையை மூடி வைத்து மிதமான தீயில் 3 நிமிடம் ஆவியில் வேகவிடவும். சுவைமிகு சுர்னாலி தோசை தயார்!