மணத்தக்காளி வற்றல் குழம்பை இப்படி செய்து பாருங்கள்... செம ருசியாக இருக்கும்!!!

சென்னை: உடலுக்கும் ஆரோக்கியம்... ருசியும் பிரமாதமாக இருக்கும் மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்முறை உங்களுக்காக.

தேவையானவை: மணத்தக்காளி வற்றல் - 4 டீஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, வெந்தயம், கடலைப்பருப்பு, கடுகு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை 200 மில்லி தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத் தூள், வெந்தயம் சேர்க்கவும்.

பின்னர் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, சாம்பார் பொடி சேர்த்து வறுக்கவும். பிறகு, மணத்தக்காளி வற்றலையும் போட்டுக் கிளறி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு கறிவேப்பிலை தூவி இறக்கவும். அருமையான ருசியில் மணத்தக்காளி வத்தல் குழம்பு தயார்.