ஆரோக்கியம் அளிக்கும் கறிவேப்பிலை அடை செய்து பாருங்கள்!!!

சென்னை: கறிவேப்பிலையை வாசனைக்காக மட்டும்தான் உபயோகப்படுத்துகின்றனர். அதில் உள்ள மருத்துவ குணங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பலரும் சாப்பாட்டில் உள்ள கறிவேப்பிலையை ஒதுக்கி விடுவார்கள்

இதனால் இயற்கையில் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கியம் கிடைக்காமல் போய்விடும். இதற்காக உங்கள் குடும்பத்தினருக்கு கறிவேப்பிலை சேர்த்த அடை செய்து கொடுங்கள்.

தேவையானவை
இட்லி அரிசி- ஒரு கப்கறிவேப்பிலை - ஒரு கப்துவரம்பருப்பு - கால் கப்காய்ந்த மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப)சீரகம் - ஒரு டீஸ்பூன்பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இட்லி அரிசி, துவரம்பருப்பைக் கழுவி ஊறவைக்கவும். கறிவேப்பிலையை நன்கு அலசவும். அரிசி, பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை கிரைண்டரில் சேர்த்து சற்றே கொரகொரப்பாக அரைக்கவும். கறிவேப்பிலையையும் சேர்த்து ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவை எடுக்கவும்.

தோசைக்கல்லைச் சூடாக்கி மாவை தோசை ஊற்று வது போல் ஊற்றி, நல்லெண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும். இதற்குத் தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷன்.