கலோரி மிகவும் குறைந்த ஆப்பிள்... டீ செய்து குடியுங்கள்: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

சென்னை: ஆப்பிளில் கலோரிகள் மிகவும் குறைவாக இருப்பதால் உடல் எடையைக் குறைப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. ஆப்பிளில் டீ செய்து குடித்து வந்தால் மிகவும் ஆரோக்கியம்.

தேவையான பொருட்கள்
ஆப்பிள் -1டீத்தூள் - 1டீஸ்பூன்இஞ்சி - சிறுதுண்டுஎலுமிச்சை -1மிளகு - 1டீ ஸ்பூன்தேன் -சுவைக்கேற்ப

செய்முறை: பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மிளகு, எலுமிச்சை சாறு, இஞ்சி போன்றவற்றை சேர்க்கவும். தண்ணீர் பாதியாகக் குறையும் வரை கொதிக்க விடவும்.

இதனை வடிகட்டி தோல்சீவிய ஆப்பிளை துருவிப் போடவும். சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலக்கவும். இதில் டீத்தூள் அல்லது டீபேக் போட்டு 10 நிமிடங்கள் மூடி விடவும்.

வடிகட்டி கோல்ட் டீயாக குடிக்கலாம். சுவையும், மணமும் அபாரமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அற்புதமான டீ. தினமும் குடித்துவர உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.