கிராமத்து ருசியில் நெத்திலி மீன் குழம்பு செய்முறை

சென்னை: ருசியான முறையில் கிராமத்து ருசியில் நெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் – 1/4 கிலோ
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
பூண்டு – 6
மஞ்சள் தூள் – ‌ 1/4 ஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவையானஅளவு
மிளகாய் தூள் – 2 ஸ்பூ‌ன்
இஞ்சி நறுக்கியது – 2 ஸ்பூன்
தனியா தூள் – 2 ஸ்பூ‌ன்
பச்சை மிளகாய் – 2
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
கடுகு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை : முதலில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், வெங்காயம், நறுக்கிய இஞ்சி பூண்டு போட்டு தாளித்து ,தக்காளி சேர்த்து வதக்கி மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.

பின் புளி தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். பின்னர் குழம்பு கெட்டியானவுடன் சுத்தம் செய்த நெத்திலி மீனை போட்டு 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து கருவேப்பிலை போட்டு இறக்கினால் கமகமக்கும் சுவையான நெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு தயார் !