சர்க்கரை நோயாளிகள் சாப்பிட எந்த ரவா, ஓட்ஸ் இட்லி சிறந்தது

சென்னை: அரிசி இட்லியை விட ரவா இட்லி, ராகி இட்லி, ஓட்ஸ் இட்லியில் நார்ச்சத்து சற்று அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. நீரிழிவு நோய் உலகளாவிய கவலைக்குரிய நோயாக மாறி வருகிறது. உலகில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.

அடுத்த அதிர்ச்சித் தகவல் என்னவென்றால், உலகிலேயே இந்தியாவில்தான் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இந்த வகை சர்க்கரை நோய்க்கு காரணம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதுதான்.

நீரிழிவு நோயாளிகள் தாங்கள் சாப்பிடும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

நீரிழிவு நோயாளிகள் சில உணவுகளை சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், காலை உணவைத் தவிர்க்கக்கூடாது.

உடலுக்கு ஆற்றலை வழங்கும் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அனைவருக்கும் பிடித்த உணவு இட்லி. ஒரு இட்லியில் சுமார் 58 கலோரிகள் உள்ளன. சர்க்கரை நோயாளிகள் இட்லியில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளதாலும், கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகமாக இருப்பதாலும், நார்ச்சத்து குறைவாக உள்ளதாலும், அதிக அளவில் சாப்பிடக்கூடாது.

எண்ணெய் மற்றும் கொழுப்பு இல்லாதது மற்றும் ஜீரணிக்க எளிதானது அதன் நன்மைகளாக கருதப்படுகிறது. அரிசி இட்லியை விட ரவா இட்லி, ராகி இட்லி, ஓட்ஸ் இட்லியில் நார்ச்சத்து சற்று அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.