ஆஹா ருசி பிரமாதம் என்று ரசித்து சாப்பிட வாழைப்பூ முட்டை பொரியல்

சென்னை: அதிக நார்ச்சத்து கொண்ட வாழைப்பூவை துவர்க்கும் என்பதால் சிலர் அதை ஒதுக்கி விடுகின்றனர். ஆனால் அருமையான மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இது உடல் ஆரோக்கியத்தை மேற்கொள்ளும். வாழைப்பூவை ஒதுக்குபவர்களும் அதை சாப்பிட வைக்கும் வகையில் வாழைப்பூ முட்டை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
வாழைப்பூ-1முட்டை-2பெரிய வெங்காயம் -3மிளகாய்-2சீரகம்- தேவையான அளவுகடுகு- தேவையான அளவுஉளுந்து- தேவையான அளவு,கறிவேப்பிலை- தேவையான அளவுமஞ்சள்தூள்- தேவையான அளவுமிளகுத்தூள்- தேவையான அளவுசீரகப்பொடி- தேவையான அளவு

செய்முறை: வாழைப்பூவை சுத்தம் செய்து தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

வெங்காயம், வாழைப்பூ இரண்டையும் போட்டு நன்கு வதக்கி தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். பின்னர் முட்டையை உடைத்து ஊற்றி மிளகுத்தூள், சீரகப்பொடி சேர்த்து வதக்கினால் வாழைப்பூ முட்டை பொரியல் ரெடி. அருமையான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த இதை செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.