உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயக்களி செய்யலாம் வாங்க!!!

சென்னை: உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வெந்தயக்களி செய்யலாம் வாங்க.

தேவையானவை:

புழுங்கல் அரிசி - 300 கிராம்
உளுந்தம் பருப்பு - 50 கிராம்
வெந்தயம் - 50 கிராம்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
நாட்டுச் சர்க்கரை - 300 கிராம்

செய்முறை: புழுங்கல் அரிசியை இரவே ஊறவைத்து நன்றாக மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். உளுத்தம் பருப்புடன், வெந்தயம் சேர்த்து, தனியாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் புழுங்கல் அரிசி மாவுடன், உளுந்து மாவைக் கலக்கவும். தோசை மாவு பதத்திற்கு நன்றாகக் கலந்த பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி, கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

களி போல நன்றாகத் திரண்டு வரும்போது நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துக் கலக்க வேண்டும். பாத்திரத்தில் கிண்டும் போது நடுவே கட்டிகள் வராத அளவுக்கு கிண்ட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். பின்னர் உருண்டைகளாக உருட்டிச் சாப்பிடலாம்.

பலன்கள் : கிராமத்தில் வயதானவர்களுக்கு தரப்படும் முக்கியமான உணவு வெந்தயக்களி. இதில் அத்தனை சத்துக்களும் இருக்கிறது. உடலை வலுவூட்டும் .உடல் குளுமை அடையும், செரிமானம் சீராகும், வயிற்றுப்புண், வாய்ப்புண் இருந்தால் குணம் கிடைக்கும். களி சாப்பிட்டால், நலம் பெருகும்.