ருசியாக செய்யலாம் வாங்க சிக்கன் பக்கோடா!!!

சென்னை: சுவையாக, ருசி மிகுந்த ஹோட்டல் சுவையில் சிக்கன் பக்கோடா செய்முறை உங்களுக்காக.

தேவையான பொருட்கள்கோழி – ½ கிலோகடலை மாவு – ¼ கப்சோள மாவு – 2 ஸ்பூன்மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்கரம் மசாலா – ½ ஸ்பூன்மிளகாய் தூள் – ½ ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்முட்டை – 1எலுமிச்சை சாறு – சிறிதளவுகேசரி கலர் – சிறிதளவுஎண்ணெய் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவுகறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை: முதலில் கோழியை நன்றாக சுத்தம் செய்து பக்கோடா செய்வதற்கு ஏற்ற சிறிய துண்டுகளாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு 1 முட்டையை உடைத்து சேர்க்கவும்.

தேவையான அளவு உப்பு மற்றும் கேசரி கலர் சேர்த்து பிறகு வெட்டி வைத்துள்ள சிக்கன் சேர்த்து நன்கு கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு 1 மணி நேரம் ஊறிய பின் கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சிக்கனை போட்டு வதக்கவும்.

அதே எண்ணெயில் சிறிது கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, சிக்கனுடன் சேர்த்து பரிமாறவும் சுவையான சிக்கன் பக்கோடா.