திருமணத்திற்கு முன்பே வாழ்கை துணையிடம் அறிந்த கொள்ள வேண்டிய விஷயங்கள்

திருமணத்திற்கு முன்பே மனம் விட்டு பேசும் சந்தர்ப்பங்கள் இந்த காலகட்டத்தில் உள்ளது. இதனால் மணமகனும், மணப்பெண்ணும் தங்கள் அபிலாஷைகளை பகிர்ந்து கொள்ளமுடிகிறது. இதனால் துணையின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகளையும் அறிந்து கொள்ளமுடியும். திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது.

பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து கொள்கிறீர்களோ அதே அளவுக்கு பிடிக்காத விஷயங்களையும் எடுத்துக்கூறிவிட வேண்டும். சமையல், பயணம், படிப்பு போன்றவற்றில் இருந்து துணையின் வாழ்க்கை முறையை பற்றி அறியவும் முயற்சிக்கலாம். இந்த விஷயத்தில் துணை யின் விருப்பம் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப முடிவு எடுக்கவேண்டும். அப்போதுதான் இருவருக்கும் இடையே தவறான புரிதல் ஏற்படாது.

திருமணத்திற்கு முன்பு துணை நன்றாக சமையல் பழகிவிட்டாரா? என்பதை கேட்டறிந்து கொள்வதில் தவறில்லை. திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்ல விரும்பும் பட்சத்தில் சமையல் வேலையில் சின்ன சின்ன உதவிகளை செய்வதற்கும் முன்வர வேண்டும். பெண்கள் ஆண் நண்பர்களிடம் இருந்து முழுவதுமாக விலக வேண்டிய நிர்ப்பந்தம் எழும். திருமணத்திற்கு முன்பே வருங்கால கணவரிடம் அதுபற்றி பேசிவிடுவது நல்லது.

திருமணத்திற்கு பிறகு சிலர் குழந்தை பிறப்பை சில காலம் தள்ளிப்போட விரும்புவார்கள். இதுபற்றி இருவரும் மனம்விட்டு பேசிவிட வேண்டும். தற்போது அணியும் ஆடை கலாசாரத்தையே திருமணத்திற்கு பிறகும் பின்பற்ற நிறைய பெண்கள் விரும்புவார்கள். அதுபற்றி முன்கூட்டியே துணையிடம் பேசிவிடுவது நல்லது. பணப்புழக்கம் பெண்கள் விஷயத்தில் முக்கியமானது. திருமணத்திற்கு முன்பே நிதி நிலைமை பற்றி வெளிப்படையாக பேசிவிட்டால் திருமணத்திற்கு பிறகு தேவையற்ற செலவுகளை தவிர்த்துவிடலாம். சேமிப்புக்கு எவ்வளவு ஒதுக்க வேண்டும் என்பது பற்றி கலந்தாலோசித்துவிடுங்கள்.